“மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்குதான். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் (vijay antony) இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி கூறியதஹ்வாது :
என்னைப் பொறுத்தவரை நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையில்லாதது. எல்லோருமே நோட்டாவுக்கு வாக்களித்துவிட்டால், யாரை நாம் தேர்ந்தெடுப்பது?
வாக்களிக்காமல் இருந்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுவதில் பயன் இல்லை. வாக்களிப்பது என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியம். எனவே, அனைவரும் வாக்களிக்க வர வேண்டும்.
மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்குதான். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் (vijay antony) இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.