நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி கடற்கரை சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனை நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஆர்தர் வில்சன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு இணையாக இந்த திரைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று பார்த்திபன் இதற்கு விளம்பரம் செய்து வரும் நிலையில், அது தவறான தகவல் என்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதேபோல் இந்த படத்தில் நடித்த பிரிகிடா சேரி மக்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்று பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பிரிகிடாவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை கைது செய்யவும் வலியுறுத்தினர்.
நடிகர் பார்த்திபன் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்னிப்பு கோரியதால் அந்த பிரச்சனை ஓய்ந்தது. மேலும் இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். குடும்பத்துடன் இதை பார்க்க முடியாது என்றும் பலர் தெரிவித்தனர். அதேநேரம் இது துணிச்சலான முயற்சி என்ற பாராட்டுக்களும் சேர்ந்தே வந்தன.
இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் இதில் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக கூறப்படுகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் நடித்த ரேகா நாயர் மேலாடை விலகியப்படி நடித்திருந்தார். இதனை சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில்,ஆத்திரம் அடைந்த ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரைச்சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பயில்வானை நிறுத்தி சண்டையில் ஈடுபட்டார்.நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் இது என் விருப்பம் ,உங்களுக்கு என்ன என்று சீரி பாய்ந்த ரேகா கட்டமாக சில வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே கைகலப்பாக மாறும் சூழலில் செருப்பு பிஞ்சிடும் என்று ஆவேசமாக கத்தினார்.இதனால் அங்கிருந்தவர்கள் அவரை சமாதான படுத்தினர். தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.