கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் தற்போது வரை ஒருவர் மட்டுமே கைதாகி உள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வந்தது.
கனவோடு மருத்துவர் பயிற்சி எடுத்து வந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பலரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் தான் குற்றவாளி என கொல்கத்தா சியால்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியும் உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு மேற்கு வங்க அரசு 17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .