ஆளுநர் வெளிநடப்பு-சபாநாயகர் அப்பாவு மரபை மீறியதால் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளியேறியதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.அப்போது தலைமைச் செயலகத்தில் ஆளுநர் ரவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ,தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி முவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவையில் நிராகரிக்கப்பட்டது.
மேலும் உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மரபை மீறியதால் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளியேறியதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: TN Assembly |அரசின் உரையை படிக்க மறுத்த R.N. ரவி!
இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நகேந்திரன்,
“நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முறைப்படி வந்தார். முறைப்படி சபாநாயகர் அப்பாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றனர்.
தமிழ்நாடு அரசு எழுதி கொடுப்பதை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதுதான் மரபு. அதன்படி, தமிழ்நாடு அரசு எழுதிக்கொண்ட உரையின் முதல் 2 பக்கங்களை ஆளுநர் வாசித்தார்.
கடந்த ஆண்டு தமிழ்தாய் வாழ்த்துடன் நாட்டுப் பண் வாசிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி சபாநாயகருக்கு கடிதம் மூலம் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அப்போது கூட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதிலளித்திருந்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756927570850058354?s=201
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையின் 2 பத்திகளை மட்டும் படித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டுப்பண் பாட வேண்டும் என்ற கருத்தை கூறி விட்டு அமர்ந்துவிட்டார்.
அதன்பின்னர், தமிழ்நாடு அரசின் உரை தமிழில் முறைப்படி வாசிக்கப்பட்டது. அது, அவைக்குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டது.
இவை, எல்லாம் முறையாக தான் நடந்தது. அதன் பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வாங்கி தர வேண்டும் என்றதுடன்,
சிலரின் பெயர்களை பயன்படுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவி முறைப்படி, மரபுப்படியே நடந்துக்கொண்டார்.
சபாநாயகர் அப்பாவு மரபை மீறியதால் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்று தெரிவித்தார்.