12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள சின்ன மாட்டுக் கடை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய 17 வயது மகள் பிளஸ் 2 வரை படித்துள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதனை அடுத்து அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் மாணவி தற்கொலை முயற்சி குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலில் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் காவல்துறையின் விசாரணையில் மாணவி முனி ரத்தினம் என்பவரைக் காதலித்ததாகவும், அவர்,திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில், தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்+2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.