பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான இந்தி நடிகை ஹினா கான் (hina khan) மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவர், ‘நாகினி’தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார் எனபது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில்,
“எனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. நான் வலிமையானவள், உறுதியானவள், இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன்.
சிகிச்சை தொடங்கிவிட்டது. தயவு செய்து எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கி றேன்” என்று கூறியுள்ளார் ஹினா கான்.
மேலும், எனது இந்தப் பயணத்தில் உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு உதவும் என்றும், எனக்காக உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசிகள் தேவை என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் (hina khan).
இதையடுத்து இந்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என தெரிவித்து வருகின்றனர்.