தனித்து நிற்பது தொடர்பாக பாஜக மாநில தலைமை முடிவு செய்யும் என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக நிறைவேற்றவில்லை. மேயர் தேர்தல் நேரடியாக நடைபெற்றால் மதுரை மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க அழுத்தம் கொடுப்போம்’ என்றார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க முடியும். தனித்து நின்றாலும் வெல்ல கூடிய திறன் பாஜகவிற்கு உள்ளது. தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது.
இந்த தேர்தலில் எங்கள் வாக்கு வங்கி பலத்தை காண்பிப்போம். அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. தனித்து நிற்பது குறித்து மாநில தலைமை முடிவு செய்யும்” என்றார்.