அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாஜக மகளிர் அணி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் தடையை மீறி பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட குஷ்பு பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, பேரணிக்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது தெரியும் என போலீஸ் வாகனத்தில் ஏறும்போதே கூக்குரலிட்டார்.
Also Read : காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளசுகள் கைது..!!
இதேபோல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தியும் மிளகாய் வற்றலை இடித்து கண்ணகி சிலைக்கு பூசியும், கையில் சிலம்புடன் கண்ணகி வேடமிட்ட பெண் நீதி வேண்டும் என முழக்கமிட்டபடியும் பாஜக மகளிரணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.