ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரரான பும்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி சந்தித்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரை தவிர்த்து இந்த வருடம் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.
பந்துவீச்சு , பேட்டிங் , fileding என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணி எதிரணியை திணறடித்து அசத்தல் வெற்றி பெற்று வருகிறது.
Also Read : ‘மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர்’ பட்டம் கொடுக்க வேண்டும் – திருமாவளவன் விமர்சனம்..!!
அந்தவகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடியது . இதில் சிறப்பாக பந்துவீசிய ஜாஸ்பிரிட் பும்ரா அதிக விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரரான பும்ரா (883 புள்ளிகள்) முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஜெய்ஸ்வால் 2வது இடத்திலும் (825 புள்ளிகள்), கோலி 13வது இடத்திலும் (689 புள்ளிகள்) உள்ளனர்.