கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் (silmbarasan) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் சிலம்பரசன் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தையும் தயாரித்து நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் கதை எழுதும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் தற்போது சிலம்பரசன் (silmbarasan) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதன் மூலம் முதன்முறையாக கமல் திரைப்படத்தில் சிலம்பரசன் இணைந்து நடிக்கவுள்ளார் எனவும், இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் தற்போது மணிரத்னத்துடன் மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படத்தில் இணைகிறார் சிலம்பரசன்.
கமல்ஹாசனின் 234-வது படமான இந்த படத்தில், கமல்ஹாசன் சிலம்பரசன், மணிரத்னம் கூட்டணியுடன் சேர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மேலும், இந்த திரைப்படம் சிம்புவுக்கு 50-வது படமாகவும் அமைகிறது.