சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது என்றும், முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குனரான சுதிப்தோ சென் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது, கேரளாவின் வடக்கு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு விதமான கேரள மாநிலம் இருப்பதாகவும், தென் பகுதி கேரளம் அஞ்சல் அட்டையை போல் வெளிப்படையாகவும், இயற்கையான கழிமுகதுவாரம், அழகான வனப்பகுதிகள், களரிபயட்டு கலை, நடனம், பாரம்பரிய தற்காப்பு கலைகள், யானைகள் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டதாக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதான் உலகம் அறிந்து வைத்திருக்கும் கேரள மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வேறொரு கேரளாவும் உண்டு என்றும், அது கேரளாவின் வடக்கு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு பகுதியில் உள்ள மலப்புரம், காசரகோடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகள் தெற்கு கர்நாடகாவுடன் இணைந்துள்ள பகுதிகள் என்றும், மங்களுர் உள்பட இந்த பகுதிகள் அனைத்தும் தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குகின்றன என்றும், சுதிப்தோ சென் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல பிஜேபி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேரள ஹிந்து பெண்கள் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட பின்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில்
செய்யப்பட்ட பின்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில்சேர்க்கப்படுவதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளதால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.ஆனால், கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் ஹிந்து பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறானது என்ற கருத்தும் கேரள உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சமூக வலை தள பக்கங்கள் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகளில் இருந்து இந்த 32 ஆயிரம் பெண்கள் என்ற வாக்கியத்தை நீக்கி விடுவதாக, படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருதலால் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.