Deepika Padukone : பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
நடிகை தீபிகா படுகோனே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் ரன்வீர், தீபிகா இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் பதான், ஜவான் ஆகிய இரண்டு மாஸ் ஹிட் படங்களில் நடித்து விட்டார் தீபிகா (Deepika Padukone).
அந்த இரண்டு படங்களிலுமே தீபிகா நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நடிப்பில் வெளியான அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபிகா படுகோனே நடிப்பில் ‘ஃபைட்டர்’ என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், அடுத்து நடிகை தீபிகா கைவசம், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்கி’ திரைப்படம் உள்ளது. இதில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தீபிகா.
இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கல்கி படத்தில் நடித்து முடித்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார் தீபிகா. அதாவது, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, தனக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ள மகிழ்ச்சிகரமான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகி உள்ள தீபிகாவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.