Mari Selvaraj :என்னுடைய கதையை திரைப்படமாக்க தடுமாறும் போது, திருமா அண்ணன் பேசிய வீடியோக்களை பார்ப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ‘இளவந்திகை திருவிழா’ மற்றும் ‘ ‘எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா’ இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குனர் மாரி செல்வராஜ், கிரேஸ் பானு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.அது தான் எனது வாழ்க்கையின் முதல் விருது, அதுவும் பாரதிராஜாவிடம் வாங்கியது மிகுந்த சந்தோசத்தை அளித்தது.
இதையும் படிங்க: விபத்துக்கு பிறகு மதுமிதாவின் வைரல் வீடியோ!!
அந்த நிகழ்ச்சியில் என் எதிரே தந்தையாக திருமாவளவன் அமர்ந்திருந்தார்.என்னை அறியாமல் என்னுடைய கால் அவரை நோக்கி சென்றது.
விருதை அவரிடம் வழங்கியபோது என்னை கட்டியணைத்து கொண்டார். அது தான் என் முதல் மற்றும் முக்கிய விருது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ,என்னுடைய கதையை படமாக்குவதற்கு முந்தைய நாளில், அந்த காட்சி வெளியானால் என்னை எப்படி பார்ப்பார்கள்? எந்த மாதிரியான விமர்சனங்கள் வரும்? என எல்லாத்தையும் யோசித்து தடுமாறும்போது,
அண்ணன் திருமாவளவன் பேசிய வீடியோக்களை பார்ப்பேன், அதில் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய நிதானம் மற்றும் ஜனநாயகம் குறித்த பேச்சுகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் வரும் தலைமுறைக்கு நிஜத்தையும் நம் வலிகளையும் கடத்துவதன் மூலம், இந்த சமூகத்தில் நுழைவதற்கு முன்பாக அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமூகம் யார்?
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என புரிந்துகொள்ள வேண்டிய கடமை எனக்கு இருக்கு, என நம்பிக்கை அளித்தது அண்ணன் திருமாவளவனின் பேச்சு என்று தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1763108503298957800?s=20
மேலும் திருமாவளவனின் மேடை பேச்சுகளில் ஆரோஷமாக இருக்குமே தவிர , நிதானத்தை தவறவிட்டது இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பரியேறும் பெருமாள், கர்ணன் , மாமன்னன் படங்களில் தனது கோவத்தை வெளிக்காட்டியது இல்லை. எனது கோவம் என்பது அளவிட முடியாதது .
எனது கோவத்தை , திரைகதை வடிவமாக மாற்ற முடியாது. திரைக்கதை வடிவம் என்பது ஜனநாயகமான ஒரு செயல். எனது எண்ணத்தையும் ,கோபத்தையும் திரையில் கொண்டு வர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வந்தால் அதனை சென்சார் போர்டு அதை அனுமதிக்காது.
சென்சார் போர்டு நிஜத்தை அனுமதிக்காத போது எப்படி கோவத்தை அனுமதிக்கும் . தான் இயக்கிய அனைத்து படங்களில் வைத்த காட்சிகள் அனைத்தும் நிஜம்.அதனை கோவமாக மாற்றினால் அதன் வீழ்ச்சி வேறு மாதிரியான தாகத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
அடுத்த தலைமுறையினரிடன் நம்முடைய சமூகத்தை பற்றி தெரிவிக்கவேண்டும். அது நம்முடைய கடைமை. அந்த செயலை திருமாவளவன் அண்ணன் செய்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.