95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் RRR படத்தில் நாட்டு நாட்டுப் பாடலுக்கு அஸ்கர் விருதைக் கைப்பற்றியுள்ளது.
உலக திரைத்துறையின் உயரிய விருதாக கருத்தப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படயுள்ள நிலையில் இதில் இந்தியாவிலிருந்து மூன்று பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது.
அதன்படி சிறந்த பாடலுக்கான பிரிவில் RRR படத்தில் நாட்டு நாட்டுப் பாடலும், ஆவண பல பிரிவில் The Elephant Whisperers ஆவணப்படம் படமும், ஃபியூச்சர் செல்லும் பிரிவில் Haulout, How Do You Measure a Year? ன்ற படமும் போட்டியிட்டது.
இதில் ‘All That Breathes’ என்ற படம் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
அதேபோல ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடங்களில் நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR திரைப்படம் சிறந்த இசை (அசல் பாடல்) பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
எம்.எம். கீரவாணி இசையமைத்த இந்தப் பாடலை அதன் பாடகர்களான கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடினர். ஏற்கனவே இந்த ஆண்டின் கோல்டன் குளோப்ஸில், ‘நாட்டு நாடு’ சிறந்த அசல் பாடலை வென்றது,
கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படமாக RRR ஆனது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் மற்றும் நாட்டு நாட்டுக்கான சிறந்த பாடல் ஆகிய இரண்டு வெற்றிகளுடன் 28வது கிரிட்டிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருதுகளில் RRR ஒரு சிறப்பம்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.