மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான விஜய்யை சந்தித்துள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரத்தின் பெயர் என்றால் அது ‘மார்க் ஆண்டனி’ தான். பாட்ஷா படத்தில் ரகுவரன் அந்த பாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். அந்த பெயரை தலைப்பாக கொண்ட படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

விஷால், நடிப்பில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில்,
தற்போது படப்பிடிப்புக்கள் முடிவடைந்து டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.இந்த நிலையில் நடிகர் விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான விஜய்யை சந்தித்துள்ளனர். மார்க் ஆண்டனி டீசர் தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது நடிகர் விஜய்க்காக கதை தயாரித்துள்ள விஷால்! திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எனது ஆசையை ‘துப்பறிவாளன் 2′ மூலம் தொடங்கியுள்ளேன்; உங்களுக்காகவும் 2 கதைகளை தயாரித்துள்ளேன் எனக்கூறிய விஷாலிடம், ‘நீ வா நண்பா.. நான் இருக்கிறேன், சேர்த்து பயணிப்போம்
என தெரிவித்து உள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், “எனது சகோதரர் மற்றும் ஹீரோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் டீசரை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் என்றென்றும் மகிழ்ச்சி” என விஷால் ட்வீட் செய்துள்ளார்.
தற்போது விஷால் சமூக வலைத்தளத்தில் ThalapathiVijayForMarkAntony என்ற ஹாஷ்டாக்கை மட்டும் பதிவிட்டிருப்பதால் இந்த டீசரை விஜய் வெளியாட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.