ஃபேஸ்புக் தரத்தை மேம்படுத்தும் வகையில், அந்த நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய நிலையில், ஓர் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு ஒன்று நடந்தது. அதன் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில், ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபேஸ்புக்கின் பெயர் “மெட்டா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நிலவி வரும் சமூக பிரச்னைகளுடன் போராடி கற்றுக் கொண்டதை அடிப்படையாக கொண்டு, இப்போது புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறோம். அதே சமயம், தங்களுடைய மேலான சேவையும், வாடிக்கையாளர் மீதான அக்கறையும் மாறவில்லை.
அப்ளிகேஷன்கள் மற்றும் அதன் பிராண்டுகள் அப்படியே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.. இந்த நொடி முதல் மெட்டாவெர்ஸ் தான் எங்களின் முதல் இலக்கு, தவிர ஃபேஸ்புக் அல்ல. அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஃபேஸ்புக், மெய்நிகர் ஆன்லைன் உலகமான மெட்டாவெர்ஸ் என்ற அடுத்தக்கட்டத்துக்கு தன்னை நகர்த்ஹ்தி வருகிறது. அதற்காகதான் இப்படி ஒரு புது பெயரையும் மாற்றியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இதுபோன்று தன்னுடைய பெயரை மாற்றியிருக்கிறது. ஆரம்பத்தில் இதற்கு “தி ஃபேஸ்புக்” என்றுதான் பெயர். அதற்கு பிறகு “பேஸ்புக்” என்று மறியது. இப்போது இன்னொரு பெயர் மெட்டாவும் இணைந்துள்ளது. ஃபேஸ்புக் பெயர் இப்போது எப்படி பிரபலமாக உள்ளதோ, அதே அளவுக்கு மெட்டாவும் மக்களிடம் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.