தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் தெலுங்கு ,கன்னடம் ,மற்றும் மலையாளத்தில் என பல்வேறு மொழிகளில் தனது மென்மையான குரலில் பாடல் பாடியவர் திரைப்பட பின்னணி பாடகி சங்கீதா சஜித் .
இவர் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் .அவருக்கு வயது 46 ஆகும் . இந்த நிலையில் சிறுநீரக னாய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் , அவரது சகோதரி இல்லத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார் .
சங்கீதா சஜித்தின் இறுதி சடங்குகள் இன்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறும் என அவரது குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் சங்கீதா சஜித்தின் மறைவிற்கு மலையாள நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்