தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகை ஹன்சிகா அறிமுகமானார்.

அதன் பிறகு, கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு போன்ற படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை அரண்மனையில் ஹன்சிகா சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகா சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் சில கவர்ச்சி புகைபடங்களை பகிர்ந்து வருகிறார்.முன்பெல்லாம் கொஞ்சம் குண்டாக இருந்த ஹன்சிகா, திருமணத்திற்க்கு பிறகு ஸ்லிம்மாக, அட்டகாசமாக கவர்ச்சியாக இருக்கிறார்.

தற்போது இவர் கருப்பு உடையில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.