ஜப்பானில் 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் வெப்பமண்டல புயலான மார்வார், கரையை கடந்ததே கனமழை கொட்டித் தீர்க்க காரணம்.
இந்த கனமழையால், கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையில், ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.