அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம், கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள் என ( Annamalai ) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
கோவையில் 3வது முறையாக சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதன்மூலம் மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
தனியாக போட்டியிடும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதுவரை கோவையில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கிறதா? 6 சட்டமன்ற தொகுதிகளில் 3ல் அதிமுக டெபாசிட் இழந்திருக்கிறது.
2019-ல் ஆளுங்கட்சியாக இருந்த போதே அதிமுகவால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியல.. 2024-ல் இன்று பல இடங்களில் டெபாசிட் இழந்து இருக்கிறார்கள்.. அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.. அடுத்து 3 முனை போட்டி 2 முனையாக மாறும்
ஒரு கட்சி என்பது குழந்தையை போன்றது. முதலில் தவழ்ந்து சென்று பின்னர் எழுந்து நிற்கும். அதுபோலவே பாஜக தமிழ்நாட்டில் படிப்படியாக முன்னேறி வருகிறது.
அப்பாவி ஆடுகளை வெட்டாமல் கோபம் இருந்தால் என்மீது கை வையுங்கள் நான் கோவையில் தான் ( Annamalai ) இருக்கப்போகிறேன் அப்பாவி ஆடுகளை துன்புறுத்த வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.