நடிகை ரேவதி (revathi divorce) 16 ஆண்டுகாலம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது கணவரை விவாகரத்து செய்த அவர் தனியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், முதல்முறையாக ரேவதி தனது விவாகரத்து பற்றி மனம் திறந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி, ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

மேலும் தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், இந்தி,மலையாளம் என பல மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார். 80களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை ரேவதி, ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் இயக்கிய புதிய முகம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவரையே காதலித்து 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அந்த படத்தில் இடம் பெற்ற ‘கண்ணுக்கு மை அழகு’ என்ற பாடல் தற்போது வரை அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. இந்நிலையில், திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்ற இவர்கள் 2013ஆம் ஆண்டு விவாகரத்து (revathi divorce) பெற்று பிரிந்தனர்.

அதையடுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் ரேவதி ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில், அவள் என் தத்துக்குழந்தை இல்லை மஹியை நான் 10 மாதம் சுமந்து பெற்றேன் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ரேவதி, தனது திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில், திருமணமாகி 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், குழந்தை இல்லை என்ற காரணத்தால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.