இஸ்ரேல் – ஹெஸ்புல்லா போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது மீண்டும் லெபனானுக்கு திரும்பி வருகின்றனர்.
இஸ்ரேல் – ஹெஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே சுமார் 1 வருடத்திற்கு மேலாக கடுமையான போர் நிலவி வந்த நிலையில் தற்போது நீண்ட நெடு பேச்சுவார்த்தைகளுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது .
இதன்காரணமாக லெபனானில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது . சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் – லெபனான் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவி வருவதால் எல்லை பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பயமின்றி வெளியில் வர தொடங்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர். இதனால் வாகனங்களில் ஹாரன் அடித்தபடி சென்று தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.