நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மகனாக நடித்ததை மீம் ஒன்று கிரீயேட் செய்து, பொன்னியின் செல்வன் படத்தோடு ஒப்பிட்டுள்ளதை ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரியாக்ட் செய்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும், இயக்குனர் ராஜாவின் தம்பியுமாவார். இவர் 2002 ஆம் ஆண்டு தனது தந்தையின் தயாரிப்பிலும், தனது சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதுவரை சாதாரணமாக இருந்த ரவி, அன்று முதல் ஜெயம்ரவி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியும் வெறும் 25 படங்களுக்கு குறைவாக மட்டுமே நடித்திருக்கிறார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்கள் என்றால், ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து முடித்துள்ளார்.
தமிழக வரலாற்றில் சோழர்களின் வம்சத்தில் மிகப்பெரிய மன்னனாக விளங்கியவர் ராஜராஜன். இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. தற்போது நெட்டிசன்கள் பிரகாஷ்ராஜுக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே உள்ள ஒற்றுமையை வைத்து ஒரு மீம்ஸ் ஒன்றை போட்டிருந்தனர். அதை ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரகாஷ்ராஜை டேக் செய்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு தந்தையாக சுந்தர சோழனாக நடித்திருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்த படத்தில் தன் தந்தை சொல்ல மீறாமல் ஈழத்திலிருந்து தஞ்சைக்கு கிளம்பி, நடுக்கடலில் படகில் மாட்டிக் கொண்டு தண்ணீரில் மூழ்கி விடுவார் ஜெயம் ரவி. இதே போல தான் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்திலும் தன் தந்தை பேச்சை மீறாமல் இருப்பார். அதேபோல் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலும் ஜெயம் ரவிக்கு தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார்.
இதுபோல தொடர்ந்து தந்தை பேச்சை மீறாத ரோலில் ஜெயம் ரவியும், கண்டிப்பான தந்தையாக பிரகாஷ் ராஜையும் மூன்றாவது முறையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை மூன்றையும் இணைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட அது எப்படியோ ஜெயம் ரவி வரை போய்விட்டது. அவரும் அதை ஷேர் செய்து பிரகாஷ்ராஜை டேக் செய்து பகிர்ந்திருக்கிறார்.
Hahaha @prakashraaj sir https://t.co/VBDwnHfv97
— Jayam Ravi (@actor_jayamravi) October 4, 2022