விஜய் டிவியில் தற்பொழுது நடந்து முடிந்த பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இது அவர் வாக்கிய சம்பள விபரம் தற்பொழுது வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களை கொண்டு பல்வேறு டாஸ்க்கள் வைக்கப்படும்.
மேலும் போட்டியில் கடைசி மூன்று பேரில் ஒருவருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் பிக் பாஸ் சீசன் 6 ட்ராபிக் கொடுக்கப்படும். நடிகர் கமலஹாசன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூறு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடைசியில் ஹாசிம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ச்சர் இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற்றார் மூன்றாம் இடத்தை திருநங்கையான ஷீவின் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய பொழுது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகளமாக நடத்தப்பட்டு வருவதால் அதற்கு காரணம் கமலஹாசன் தான் என்று கூற வேண்டும்.
இந்த நிலையில் நூறு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கமல்ஹாசன் வார இறுதியில் மட்டும் வந்து கலந்து கொண்டு அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு பின்னர் மக்கள் அளித்த வாக்குகளை குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரை வெளியேற்றும் பொறுப்பு கமலஹாசன் தொகுத்து வழங்குவார்.
அதே போல் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 300 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்த உள்ளதால் அதாவது மூன்று கோடி பார்வையாளர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது பெற்று உள்ளது.
இதனால் கமலஹாசனின் சம்பளத்தொகையையும் உயர்ந்து உள்ளதாக தகவல்கள் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் 75 கோடி ரூபாய் சம்பள பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் முந்தைய சீசனை காட்டிலும் இந்த சீசன் 20 கோடி கூடுதலாக பெற்றுள்ளார்.