கமலா ஹாரிஸால் உலகப் போரை கையாள முடியாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.5ல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்காவே தற்போது தேர்தல் பிரச்சார குஷியில் உள்ளது . இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், போட்டியிடுகிறார்.
இதேபோல் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டிருந்த நிலையில் சில பல காரணங்களை மேற்கோள் காட்டி தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் .
தேர்தல் நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ஒரு பக்கம் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் மறுபக்கம் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவுகள் பெருகி வருகிறது.
இந்நிலையில் கமலா ஹாரிஸால் உலகப் போரை கையாள முடியாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகம் முழுவதும் அரசியல் சூழ்நிலைகள் மோசமாகி வருகின்றன. நாம் உலகப் போரை எதிர்நோக்கி உள்ளோம். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸால் நிலைமையைக் கையாள முடியாது. ஜோ பைடனை காட்டிலும் கமலா மோசமானவர். அதற்காக நான் ஜோ பைடனின் ரசிகன் அல்ல என டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார் .