மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சாடியுள்ளார்.
சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு டி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
கொடியசைத்து உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்து இந்த அறக்கட்டளையின் சார்பில் 10000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மழை நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர்; சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்ட காலம் போராட்டமாகவே உள்ளது இதற்கான நிரந்திர முடிவுகள் எடுக்கப்படும்.நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம்.கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.
முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக கூறிய அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பிய போது;
மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக கூறினார்.