மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் ஆகியோர் கூட்டணியில் ”லியோ” திரைபடம் தயாராகி வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைதுள்ளது ரசிகர்கள் மதியில் மிவகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
‘விக்ரம்’ படம் போலவே, ஒரு புரொமோ வீடியோவுடன் வெளியான இந்த அறிவிப்பில் படத்தின் பெயர் ‘லியோ’ (LEO) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Bloody Sweet’ என்று இந்த டீசரில் விஜய் சொல்லும் வசனம், படத்தின் டேக்லைனாக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்’LEO’ படத்தின் Bloody Sweet ப்ரொமோவில் வரும் Theme-ஐ அனிருத்திடம் Cuteஆக பாடிக் காட்டிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.