மயிலாடுதுறை பகுதியில் உள்ள மக்களை கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த (Leopard near Ariyalur) சிறுத்தை தற்போது அரியலூர் பகுதியில் முகாமிட்டுருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை பகுதியில் உள்ள சாலைகளில் நல்ல பருவம் வாய்ந்த வலுமையான சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சிறுத்தையால் உயிருக்கு ஆபத்து நேர்ந்திடுமோ என்ற பயத்தில் இரவில் நடமாடுவதை அப்பகுதி மக்கள் முழுமையாக தவிர்த்து வருகின்ற்னர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்கும் படி காவல்துறை துறை சார்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரியலூர் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . இன்று சிறுத்தையின் நடமாட்டம் உள்ள cctv காட்சிகளை வெளியிட்டு செந்துறை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (Leopard near Ariyalur) விடுமுறை விடப்பட்டது . இன்று பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்க்கு பாதுக்காப்பாக அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் குறித்து செந்துறை பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.