Cyclone Warning Alert : தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது Cyclone Warning Alert.
அதன்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதை குறிக்கும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.