ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிகரன், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read : இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற இளம் பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு..!!
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, திருமதி மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதிமுகவினர் யாரும் மலர்கொடியுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.