நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 மணி நேரத்தில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. காமெடி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ரிது வர்மா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு ஸ்டார் சுனில் குமார், நடிகை அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ஆர்யாவும் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிலையில் கடந்த 17 மணி நேரத்தில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து யூட்யூபில் ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் இந்த படத்தின் ட்ரெய்லர், கடந்த 17 மணி நேரத்தில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.