மும்பையில் அசைவம் சாப்பிட்டதை எதிர்த்து காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் அசைவம் சாப்பிட்டதால் காதலன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி மனமுடைந்த சிருஷ்டி துலி என்ற 25 வயதாகும் இளம் பெண் பைலட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் இவர், காதலனின் செயலால் மேலும் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளார்.
Also Read : தீராத சளி தொல்லை – காரணம் தெரிந்தபோது அதிர்ந்து போன இளைஞர்..!!
இதையடுத்து ஆசை ஆசையாக வளர்த்த தனது மகள் உயிரிழந்ததை கண்டு மனமுடைந்த பெண்ணின் பெற்றோர் காதலன் ஆதித்யா பண்டிட் என்பவரை கைது செய்யக்கோரி கலவத்துறையில் புகார் அளித்தனர்.
சிருஷ்டி துலியின் பெற்றோர் அளித்த புகாரைத் ஏற்றுக்கொண்ட போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.