பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு செய்ய புதிய திட்டம் ஒன்று விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தை பதிவு செய்யும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ளது.
தற்போதுள்ள அரசு நடைமுறையால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை என கூறப்படும் நிலையில் இந்த திட்டம் அனைவர்க்கும் நிச்சயம் பயன் தரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
பொதுவாக திருமணப் பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ.5,000 வரை கேட்பதாக புகார்கள் மலை போல் வானுயர எழுந்து நிற்கிறது.
இந்நிலையில் இதுபோன்ற புகார்களை தவிர்க்கவும் திருமணப் பதிவு நடைமுறை சிக்கல்களை களையவும் திருமணப் பதிவு முறையை எளிதாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணப் பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்பட்டு மிக விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.