MUSIC Director -உம் , Actor – உம் ஆன விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட சிக்கல். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தை கடந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பவே சிலநாட்கள் ஆனது , இதற்க்கு பிறகும் அவர் சந்தித்த அடுத்டுத்த சிக்கல்களை பார்ப்போம் .
கடந்த ஆண்டின் இறுதியிலேயே இவரது தமிழரசன் திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் அதன் தேதி ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்tu, திரைப்படthin Release தேதியை மீண்டும் ஒருமுறை மாற்றி April 21 வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிச்சைக்காரன் 2 திரைப்படம் வேலைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.
இந்த படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு மோசமான விபத்து ஏற்பட்டிருந்தது அதிலிருந்து மீள பலகட்ட தீவிர அறுவைசிகிச்சை செய்யப்பட்டது அதனை கடந்து படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நிறைவடைந்ததை தொடர்ந்து May மதமான 14 தேதி இதன் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மீது வழக்கு போடப்பட்டிருந்ததும் நாம் அறிந்ததே , தனது அனுமதியின்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்துதான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாக மாங்காடு மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ கணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்திருந்தார்.
இதற்காக விஜய் ஆண்டனி தனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் ஆண்டனி ஏப்ரல் 18-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலகட்ட சிக்கல்களை கடந்து மீண்டும் மீண்டும் சோதனைக்குள்ளாகியிருக்கும் விஜய் ஆண்டனியை நினைத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் .