வீட்டுச் சமையலறையில் பெண் ஒருவர் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம்,திருக்காக்கரையிலுள்ள அஜந்தா அடுக்குமாடிக் குடியிருப்பில்,ஆலன் வி ராஜு (26), யுஎஃப்ஒ அபர்ணா ரெஜி (24) ஆகியோர் வசித்து வருகின்றனர்.பொறியாளர்களான இருவரும், எட்டு மாதங்களாக இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியிருப்பில் கஞ்சா செடிவளர்க்கப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அக்குடியிருப்பில் காவல்துறை சோதனை நடத்தினர். இரண்டாவது மாடியில் உள்ள பி3 அடுக்குமாடிக் குடியிருப்பின் சமையலறையில் தொட்டியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி ஒன்றரை மீட்டர் உயரம் இருந்ததை காவல்துறை விசாரணையில் மீட்டனர்.
மேலும் இருவரையும் கைது செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.அதில் கஞ்சாவை எப்படி வளர்ப்பது என்று யூடியூப்பில் இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விவரங்களை காவல்துறை கண்டுபிடித்தனர்.
அவர்கள் செடியினை வளர்க்கச் சமையலறையில் பிரத்தியேகமாக எல்.ஈ.டி விளக்குகளும், எக்ஸாஸ்ட் பேனும்அமைத்திருந்தனர்.மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் அறையில் கஞ்சா வளர்த்த இருவரை, மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் இன்போபார்க் சிஐ விபின்தாஸ் மற்றும் எஸ்எல் ஜேம்ஸ் யான் ஆகியோர் தலைமையில் இருவரையும் கைது செய்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சமையலறையில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவமும் அதை எப்படிப் பராமரிப்பது குறித்து யூடியூப்பில் சர்ச் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.