பௌர்ணமியன்று விரதம் இருப்பது இந்து கலாச்சாரத்தில் வழக்கமமான ஓன்று அதிலும் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் குளித்து விரத்தைத் துவங்குவார்கள். பின்னர், முழு நிலவு தோன்றியபின் கடவுளை வணங்கி பூஜை செய்தபின் உணவு உண்பார்கள்.
பௌர்ணமியின் விரதத்தின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய நம்மக்கள் என்ன.?ஒருவரது எண்ணங்களையும், உணர்வர்களையும் சந்திரனோடு சம்மந்தப்படுத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
ஆன்மீக ரீதியாகவும், மன உணர்வின் அடிப்படையிலும், பௌர்ணமி தினத்தன்று, முழுவதும் நேர்மறையான வாய்ப்புகளைத் தர இருக்கிறது. ஆன்மீகத்திலும், பௌர்ணமியன்று நல்ல ஆற்றல் பெருகுவதால், அன்று விரதம் இருந்து பூஜை செய்வார்கள்.
மார்கழி மாத பெளர்ணமியின் சிறப்பு:
ஆண்டின் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வருவது வழக்கம். ஆனால் மார்கழி மாத்தில் வளர்பிறையில் வரும் பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நாளை வரும் பெளர்ணமி வெள்ளிக்கிழமையில் வருகிறது.
அப்படி வெளிக்கிழமையில் வரும் பௌர்ணமி நன்னால் சுக்ரனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுவதால் களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சுக்கிர தசை நடப்பவர்கள், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனை வணங்குவது நன்மையை தரும்.
பௌர்ணமி வழிபாடு:
இந்த பௌர்ணமி துர்க்கைக்கு உகந்தது .இந்த காலத்தில் துர்க்கை வழிபாடு மிகவும் சிறந்தது.ள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட வேண்டும். இதனை மேற்கொள்வதால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்,தடைபட்ட திருமணம்,தடைபட்ட வீடு கட்டும் பணிகள் அனைத்தும் நிறைவேறும்.
பலன்கள்:
பௌர்ணமியில் நாளில் கோவில்களில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.பௌர்ணமி அன்று பெண்கள் விரத மேற்கொள்வது குடும்பத்திற்கு நல்லது என்பது நம் முன்னோர்களின் ஐதீகம்.