ஜெயலலிதா கோடநாடு சென்றதை கருணாநிதி விமர்சித்தது போல, ஸ்டாலினின் சுற்றுப்பயணத்தை நாங்கள் விமர்சிக்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை புறவழிச்சாலை உள்ள போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான, செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது:-
அரசு பேருந்துகளில் உதிரி பாகங்களை ஒட்டுனர்கள், நடத்துநர்கள் தங்களுடைய சொந்த செலவில் மாற்ற போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்கிற.
கடினமான பணிகளை அதிமுக தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும், எளிமையான பணிகளை திமுக மற்றும் கூட்ட ணி கட்சியை தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும் நிர்வாகம் வழங்குவது கண்டிக்கத்தக்கது.
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை.
மழை வெள்ள பேரிடர் காலத்திலும், கடுமையான வெயில் நிலவும் காலத்திலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இதையும் படிங்க: அதிகரிக்கும் தங்கக் கடத்தல்… காரணம் என்ன?
திமுக அரசு மக்களின் பலம் தேவையில்லை; கூட்டணி கட்சிகளின் பலமே போதுமானது என்று நினைக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும்.
முதலமைச்சர் குடும்பத்துடன் மேற்கொண்டுள்ள பயணம் குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு பயணம் குறித்து கலைஞர் விமர்சனம் செய்தார்,
அத்தகைய முறையில் நாங்கள் முதலமைச்சர் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தை கண்டும், காணாமலும் உள்ளனர்.
போதைப் பொருள் நடமாட்ட விவகாரத்தில் உளவுத்துறையின் நுண்ணறிவுத்துறை செயலிழந்து விட்டது,.
போதை பொருள் நடமாட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்திய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழ்நாடும் மாறி உள்ளது.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.