ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்(evks elangovan )சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக கடத்த மாதம் மார்ச் 15 ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சையில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எக்ஸ்.பி.பி. வகை கொரோனா பாதிப்புடன், நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டு ,செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கும் விதாகமாக வீடியோ ஒன்று வெளியிடபட்டு இருந்தார். அதில் தான் நலமுடன் இருப்பதாகவும்,மருத்துவர்கள் தன்னை கவனித்து கொள்வதாகவும் ,குணமடைந்தது மீண்டு விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து இந்த வீடியோ வெளியிட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு சுவாச கோளாறு காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி இதய பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 20ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 22 நாள் சிகிச்சைக்கு பின் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.