தாய்லாந்தில்(thailand) துப்பாக்கிச்சூட்டு(shooting)சம்பவத்தில் 24 குழந்தைகள் உள்பட 38 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து(thailand) நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் இயங்கி வரும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த மையத்திற்குள் நேற்று ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த பயங்கர சம்பவத்தில் 24 குழந்தைகள், 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவேன், அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான தாய்லாந்திற்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர், பன்யா காம்ரப் என்பதும் அவர், நா வாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.