கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்தில் டிஜிட்டல் முறையில் கியூ ஆர் கோடில்(gpay) பயண சீட்டுக்கு பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமீபமாக காலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனகள் என டிஜிட்டல் முறை பணம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில்,பேருந்துகளில் நடத்துனர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்படும் சில்லறை பிரச்சனையை சரி செய்யும் ஒரு முயற்சியாக கோவையில் உள்ள தனியார் பேருந்துகளில் ‘க்யூ ஆர் கோடு’ முறையில் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
தமிழ் நாட்டிலேயே, முதன் முறையாக கோவையில் இந்த புதிய முயற்சியை ஜெய் சக்தி என்ற தனியார் பேருந்து நிறுவனம் குறிப்பிட்ட கியூ ஆர் கோடை பயன்படுத்தி Google pay, Paytm மூலம் பயண சீட்டு கட்டணம் செலுத்தி பயணிகள் பயணச்சீட்டை பெறும் வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
இது குறித்து கூறிய தனியார் பேருந்து நடத்துனர், பேருந்து பயணிகளிடம் சில்லறை தட்டுப்பாடால் நடத்துனர்களுக்கு பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய “G-PAY”முறை உதவியாக இருக்கும். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார்.