தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முறையாகத் திருக்குவளை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஊர் மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளை இல்லத்திற்குத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார்.
முதல்முறையாகக்அமைச்சராகப் பொறுப்பேற்று கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வருகை தந்த உதயநிதிக்கு திமுக தொண்டர்கள் மற்றும் திருக்குவளை கிராம மக்கள் மேளதாளம் முழங்க நாகை மாவட்ட எல்லையான குளப்பாடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாய் தந்தையரான அஞ்சுகம் முத்துவேல் , மற்றும் மறைந்த முரசொலி மாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகிறாரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்குக் கூடியிருந்த திமுகவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பேட, பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களைப் பரிசாக வழங்கினர்.பின்னர் கலைஞர் இல்ல நினைவகத்தில் குறிப்பெழுதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார துவக்கம்” 2020 நவம்பர் 20,ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் எனப் பதிவேட்டில் எழுதினார்.திருக்குவளை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன், டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திருக்குவளையில் பாதுகாப்புப் பணிக்காக 300, க்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டிருந்தனர்.