உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இரண்டு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் இரண்டு பேர் பாதுகாப்பு வாகனத்தை ஏற்றி கொல்லப்பட்டனர்.
இந்த வாகனத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவர் தான் வாகனத்தை இயக்கி இரண்டு விவசாயிகளை கொலை செய்தார் எனவும், விவசாயிகள் குற்றம்சாட்டி துணை முதல்வரின் ஹெலிகாப்டரை தரையிரங்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநில காவல்துறையினாரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
2 விவசாயிகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்ததற்கு நாடு முழுவதும் மாணிக்கம் தாக்கூர் எம். பி உட்பட காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.