உலகில் முதல்முறையாக மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டியை நடத்த சீனா தயாராகி வருகிறது.
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனா தற்போது அமெரிக்கா , இந்தியா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் ரோபோக்களை உருவாகும் பணிகளில் சீனா மற்ற நாடுகளை விட சற்று அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறது இதன் ஒருபகுதியாக உலகில் முதல்முறையாக மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டியை நடத்த சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 12,000 மனித மாரத்தான் வீரர்களுடன், 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான ரோபோக்கள் 21 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்க உள்ளன.
வரும் ஏப்ரல் மாதத்தில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மனிதர்கள் அல்லது ரோபோக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.