7வது t20 உலககோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 16 தேதி தொடங்கவுள்ளது. சென்ற முறை துபாயில் நடைபெற்ற தொடர் இந்த முறை ஆஸ்ட்ரேலியாவில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.
ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா அணிகளை தொடர்ந்து இந்திய அணி தனது வீரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. நேற்று பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தங்களது அணிகளை அறிவித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரான் கேப்டனாக, பொவெல் துணை கேப்டனாக உள்ளனர்.
மேலும் சார்லஸ், லீவிஸ், ஹெட்மயர், ஹோல்டர், காட்ரேல் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்களாக கரியா, ரேபியர் களமிரங்கவுள்ளனர். மேலும் ஸ்மித், ஒபே, கிங்ஸ், மேயர்ஸ், ஜோசப், ஹுசைன் ஆகியோர் அணியில் சேர்க்கபட்டுள்ளனர்.
ரசல், நரேன் வெளியேற்றம் :
இந்த அணியில் அதிர்ச்சியூட்டும் விதமாக அதிரடி மன்னன் ஆன்ரே ரசல் இடம்பெறவில்லை வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர்களில் ரசல் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். தனது அதிரடி ஆட்டத்தால் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கும் ஆற்றாலுள்ளவர்.
இதே போல நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நரேன் அணியில் சேர்க்க படவில்லை. மேலும் 2016 ஆண்டு அணியை வெற்றி அடைய செய்த பிரத்வெயிட் நீண்டகாலமாக அணியில் சேர்க்க படாத நிலையில் இந்த உலக கோப்பை அணியிலும் அவர் இடம் பெறவில்லை. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் :
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு கூறும்பொது, “ தற்போது ரசல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் வேறு ஒரு வீரரை களமிறக்க முடிவு செய்தோம் என்றனர். மேலும் நாறினே தனது பங்கேறப்பு குறித்து எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை என்றனர்.
இதே போல பங்களாதேஷ் அணியின் வீரர்கள் பட்டியலில் மூத்த அனுபவ வீரரான மகமதுல்லா இடம்பெறவில்லை. இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் கூறுகையில். “மகமதுல்லா போன்ற வீரர்களின் சேவை மிக சிறப்பானது. ஆனால் அவருக்கு பிறகு வேறு ஒரு வீரர் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பதால் நாங்கள் தற்போது வேறு ஒரு திட்டத்தை கொண்டுள்ளோமென்றனர் ”.