குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த
கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது.
குலதெய்வத்திற்குஅப்படி ஒரு சக்தி இருக்கிறது.தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும்.குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள்.நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினைநமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும்.உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம்.
தங்களுடைய வீட்டில் எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைத்துக்கும் பூஜை செய்ய வேண்டும்.உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும்.பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.
நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள்.அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும்.

உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை உங்களுக்கு புரியும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லிய மகான்களின் உண்மை வாக்கு.நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும்.ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும்
மிக முக்கியம்.
குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுகிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை என்றும்,குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடுஎன்றும் சொல்லப்படுகிறது.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிட முடியாது.

இதையும் படிங்க: உச்சினிமாகாளி பிறந்த வரலாறு : எப்பேற்பட்ட நோய்களும் குணமாகும் அதிசயம்!
நவகிரகங்களும்துணை நிற்கும்.குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் குல தெய்வங்கள் மாறலாம். ஆனால், அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும்.
வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால்
குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை
வாழ்வார்கள்.
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் .
உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடர்ந்து செய்து வருவது மிகவும் நல்லது.இவ்வளவு பெருமைகளைக் கொண்ட ஒவ்வொருவர் வீட்டு குலதெய்வத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கும். உங்களது குலதெய்வம் முருகனாக இருந்தால் ‘ஓம் முருகப்பெருமானே நம’
என்ற மந்திரத்தை தினம்தோறும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, முகம் கை கால்களை கழுவி, பூஜை அறையில் அமர்ந்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

இதையும் படிங்க: 300 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்
பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நாம் எந்த ஒரு செயலை தொடர்ந்து செய்து வந்தாலும் அதற்கான வெற்றி நிச்சயம் உண்டு.
உங்களது குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்றால்
“ஓம் குல தேவதாயை நமஹ”என்று கூறலாம்.
108 முறை உங்களது குலதெய்வம் மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு உங்களது முன்னோர்களான
ஏழு தலைமுறையினரின்க்தியை அடைய கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
ஓம் ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம்
தெளர்பல்யம் சித்தவிக்ரியா நச்யந்து
குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா
இதன் பொருள்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன்.
இப்படியாக மனமுருகி எவரொருவர் குலதெய்வத்தை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் வரமாக தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக இருக்கும் குலதெய்வ மந்திரத்தை உச்சரித்து வரலாம்.
இந்த மந்திரத்தை கூறி பூஜை நிறைவடைந்ததும் குடும்பத்தலைவர் அல்லது தலைவி தானம் செய்ய வேண்டும்.முதலில் பசுவிற்கு வாழைப்பழம் மற்றும் அரிசியுடன் வெல்லம் கலந்து கோ தானம் கொடுக்கலாம்.அதன்பின் முடிந்த அளவிற்கு பசித்தவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.