ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
“எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.” – என்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதாச்சாரத்தின்படி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அருகே ஆயக்காரன்புலத்தில்,
அமைந்துள்ள ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில், “எது நடக்க இருக்கிறதோ…அது நன்றாகவே நடக்க” அருளும் திருத்தலமாக திகழ்கிறது.
வானிலிருந்து ஒளிவடிவாய் வந்து, சுயம்புவாய் எழுந்த அய்யனார்…..
அவர் மூலம் துல்லியமாய் வழங்கும் அருள்வாக்கு…..
பிரார்த்தனைகள் நிறைவேறியதன் அடையாளமாய் குவிந்து கிடக்கும் சிலைகள்…..
பல பகுதிகளிலிருந்து தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் ….
— இப்படி பக்தர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கும் சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் பெருமிதம் கொள்கிறது.
“சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், வேதாரண்யம் கடலில் பிரளயம் ஏற்பட்டு, எங்கும் கடல் நீர் புகுந்து , குடிநீரும் உப்பு நீராகிவிட்டது. அதனால் வேதாரண்யத்தில் பிரமாண்டமாய் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே,அந்தணர்கள் நல்ல தண்ணீர்த் தேடி அலைந்தபோது, மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் ‘ஆயக்காரன்புலம்’ கிராமத்து ஓடையில் இருப்பதை அறிந்தனர். அதனால் அந்தணர்கள் அங்கேயே வீடுகள் அமைத்து தங்கி, நாள்தோறும் அந்த ஓடையில் இருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்துச் சென்றனர். அதனால் அந்த ஓடை “வேதகிரி ஓடை” என இன்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு தினமும் அபிஷேக நீர் கொண்டு செல்லும் நேரத்தில், ஒருநாள் அமாவாசை அன்று ,அந்தணர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில், ஒர் ஒளிவட்டம் வானிலிருந்து இறங்கி பூமிக்கு வருவதும், இசை ஒலிப்பதும், சிறிது நேரத்தில் மீண்டும் வானில் மறைவதுமாகக் கண்டனர். இதேபோல் பலமுறை அமாவாசை தினத்தில் தொடர்ந்து நடைபெறவே, அந்தணர்கள் ஒன்று கூடி, ஒர் அமாவாசை இரவு, வேதங்கள் ஓதியபடி சில பூஜைகளும் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அதே ஒளி வட்டம் ஆகாயத்திலிருந்து இசை ஒலியுடன் பிரகாசமாக கீழே இறங்கி வந்ததும், எல்லோரும் வணங்கினார்கள். அந்த ஒளி வட்டத்தில்,ஜோதி வடிவில் அழகான இளவரசன் ஒருவர் தோன்றி,
” பயப்பட வேண்டாம்.நம் மக்களின் அனைத்து துன்பங்களையும் தீர்க்கவே அவதாரமாக வந்து செல்கிறோம்” என்று கூறினார்.எல்லோரும் பரவசமடைந்து, “அய்யனே… அய்யனே” என்று மண்டியிட்டு வணங்கினார்கள். அந்த ஒளிவட்டம் பூமிக்குள் சென்றது. மீண்டும் மேலே செல்லாமல் இருக்க அந்தணர்கள் பூஜிக்கப்பட்ட வேதநீர் தெளித்தனர். ஆசாரியர்கள் ஒரு ஆட்டுக்கிடாவை வெட்டி பலிக் கொடுத்தனர்.ஒளிவட்டம் மீண்டும் ஆகாயம் செல்லவில்லை. அந்த இடத்தில் செங்கல் ஒன்றை பதித்து அபிஷேகம் செய்தார்கள். ஒரு மண்டலம் கழித்து ,அந்த இடத்தில் பிளவு ஏற்பட்டு, சிறிதாக ஒரு கருங்கல் வெளிப்பட்டது. அதற்கு சிறிய மண்டபம் கட்டி பூஜைகள் செய்து அய்யனாராக வழிபட தொடங்கினார்கள். மக்களின் துன்பங்களை தீர்க்க வந்தவர் என்பதால் “கலிதீர்த்த அய்யனார்” எனவும், பலி கொடுத்த இடம் “பலிபீடம்” என்றும், அழைக்கப்படுகின்றன. அதன்பின் அருள் வந்து சாமியாடிய ஒருவர் கூறிய இடத்தில் மகாதூண்டிக்கருப்பு சுவாமியும், மகாவீரப்ப சுவாமியும் காவல் தெய்வங்களாக சந்நதிகள் அமைத்து வழிபடுகின்றனர். செங்கல் நட்ட இடத்தில் இருந்த கொன்றை மரமே தலவிருட்சமாக உள்ளது. ஆகாய கங்கை தல தீர்த்தம். இதில் நீராடினால் தீராத நோய்கள் தீரும் என்கிறது” தலவரலாறு.
ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமி அன்று பகல் 12:00 மணிக்கு சூரிய ஒளியும், இரவு 12 மணிக்கு சந்திர ஒளியும் சுவாமி மீது விழும் அதிசயம், இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும்.
சாதி, மதங்களைக் கடந்து நம்பிக்கையுடன் வந்து வழிபடும் அனைவருக்கும் அருள்புரியும் அய்யனாராக இத்தலம் விளங்குவதாகவும், சகலதோஷ நிவர்த்தி, குழந்தை பாக்கியம், திருமணத் தடை நீங்குதல், வேலை வாய்ப்புகள் கிடைத்தல், தீராத நோய்கள் தீருதல் செல்வ வளம் பெருகுதல் -என வந்தாரை வாழவைக்கும் தெய்வமாக இத்தல அய்யனார் விளங்குகிறார் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இத்தலத்தின் தலைமை பீடத்தில் உள்ள கலிதீர்த்தன் என்கிற சாமியார் அருள் வாக்கு வழங்குகிறார்.
“குழந்தை பாக்கியம் இல்லை என்று வருபவர்களுக்கு, தோஷம் கழித்து, தேங்காயில் பூஜை செய்து, என்ன குழந்தை எந்தக் கிழமையில், எந்த நேரத்தில் பிறக்கும் என்று தீர்க்கமாக சொல்கிறார்.குழந்தை பிறந்து அய்யனாருக்கு குழந்தை சிலையை காணிக்கையாக தருகிறார்கள்.
திருமணம் வரன் அமையவில்லை என்று வரும் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகு காலத்தில் மாலை மாற்றி தோஷம் கழித்து, எந்த திசையில், எந்த ஊரில் ,எந்த விதமாக வரன் அமையும் என்று கூறுகிறார்.அதுபோலவே அவர்கள் மணமுடித்து கோயிலுக்கு மணமக்களாக வருகிறார்கள்.
தொடர்ந்து மது அருந்தி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களை இந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து, குடியை மறக்க தடை கயிறு அணிந்து செல்கிறார்கள்.அதன்பிறகு மது பற்றிய எண்ணமே வருவதில்லை என நன்றி தெரிவிக்கிறார்கள்.
காணாமல் போகும் எதுவானாலும், அது பற்றிய குறிப்புகள் கூறி கிடைக்க செய்கிறார்.
பில்லி, சூனியம், ஏவல் மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்தபின் முற்றிலும் குணமாகிறார்கள்.
அதேபோல் எங்கிருந்து பக்தர்கள் வந்தாலும், அவர்கள் வீடு, பக்கத்தில் இருக்கும் இடம், அவர் வந்திருக்கும் நோக்கம், அனைத்தையும் உடனே சொல்லி விடுகிறார்”
- இவையாவும் அய்யனார் அருள, அதையே கலிதீர்த்தன் சுவாமி தனது அருள்வாக்காக கூறுவதாக சொல்கிறார்கள்.
அருள் வாக்குப் பெற்று பலன் பெற்றதாகக் கூறும் பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சேவல்கள், ஆடுகள் பலி கொடுத்து அய்யனாருக்கு படையல் வைப்பதும், நாடகம் நிகழ்த்துவதும், லட்சக்கணக்கில் செலவு செய்து குதிரை சிலைகள் அமைப்பதும்,தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், பதிலுக்கு காணிக்கையாக தந்த குழந்தை சிலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குகிறார்கள்.
பிரமிக்க வைக்கும் இந்த ஆலயத்தை தரிசித்த உங்களுக்கு நன்றி கூறி, மீண்டும் ஒர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ்த் தாய் !ஐ தமிழ்த் தாய் நேயர்களுக்கு வணக்கம்.

பிரமிக்க வைக்கும் இந்த ஆலயத்தை தரிசித்த உங்களுக்கு நன்றி கூறி, மீண்டும் ஒர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ்