நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக, தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு கூட தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை காட்சி திரையிட தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
அதையடுத்து, தற்போது லியோ படத்தின் அதிகாலை காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் வருகிற 19-ஆம் தேதி அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.
அதன்படி, வருகிற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் அந்த 5 நாட்களும் தினசரி 5 காட்சிகள் அதாவது காலை 7 மணி முதல் சிறப்பு காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.