தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான திமுகவில் கடந்த சில மாதங்களாக கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியும் சிலரை வேறு பதவியில் அமர்த்தியும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
அந்தவகையில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாதன், அப்பொறுப்பில் இருந்து நீக்கம்; அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளரை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த பொ.சிவபத்மநாதன் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக. சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு. ஜெயபாலன் அவர்கள் தென்காசி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .