நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியுடன் சேர்த்து டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு.
மிக பிரமாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து, நடித்துள்ளார் விக்ரம். படத்தில் வரும் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்து சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன் பின்னர் மீண்டும் இப்படத்தில் நடித்தார்.
இயக்குனர் பா.ரஞ்சித் ஆஸ்கர் விருது, உட்பட பல விருதுகளை குறிவைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் பாரஞ்சித் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சற்று முன்னர், ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதியுடன்… டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதன்படி, தங்கலான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த அப்டேட் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.