புஷ்பா படத்தைப் பார்த்து உத்வேகம் அடைந்த ஒரு கடத்தல்காரர், திரைப்பட பாணியில் சிவப்பு சந்தனத்தை கடத்த முயன்ற போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திரைப்பட பாணியில் சிவப்பு சந்தனத்தை கடத்த திட்டமிட்ட யாசின் இனயித்துல்லா என்பவர் லாரியில் சிவப்பு சந்தனத்தை ஏற்றி, அதன் மேல் பழங்கள் மற்றும் காய்கறி பெட்டிகளை ஏற்றியுள்ளார்.
சந்தனக் கட்டைகளை வாகனத்தில் ஏற்றிய கடத்தல்காரன் எப்படியோ கர்நாடக காவல்துறையிடம் சிக்காமல் ஆந்திர எல்லையைக் கடந்து சென்ற போது மகாராஷ்டிரா காவல்துறையிடம் சிக்கினார். இதனை அடுத்து 2 சிவப்பு சந்தன கட்டைகளை கடத்திய நபரை கைது செய்த காவல் துறையினர் 2.45 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவருக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க் மற்றும் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டறிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.